Thursday, May 14, 2009

பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் !

இராட்சசிப்பெண்னே!
நான் மட்டுமா?
நீயென்றெண்ணி
நான் அணைத்துத்துயிலும் தலையணை கூட
என் கண்ணீரை அதிகம் பருகியதால்
கண்ணதாசனாய் போனது!
என்னை விட்டு பிரிந்து செல்ல
தெரிந்த உனக்கேன்
கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிவதில்லை
உன்னை ஏந்தியுள்ள என் இதயம்
படும் பாட்டை?
சிந்திக்காமல் நீயும் நானும்
சந்தித்து முத்தித்துக் கொண்ட
நிலவுப் பொழுதுகளின்.....
நினைவுப் பொழுதுகளை......
இப்போதேனும் மீட்டிப்பார்
பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் போல.....!!!!

குழந்தை மனசுக்காரி !

இதயப்பாகம் பாறை வைத்தாற்
போல கணக்கிறது....
திரும்பும் திசை எங்கும் தீப்பிடித்த
பிணவாடை மணக்கிறது!
ஒரேயொரு முத்தத்தில் மொத்த
கவலையும் கழிந்து விடும் என்று
தப்புக்கணக்கு போடுகிறாயா...?
அல்லது
முற்று முழுசாய் அன்பை
வெளிப்படுத்த முடியவில்லையே என்று
இதயம் நீ வாடுகிறாயா?
உறவுகள் நெருக்கமாய் இருப்பதெல்லாம்
பிரிவுகளிருக்கும் வரை தானா..
இடைவெளி குறைந்து விட்டால்
அன்பிற்குள் இடைஞ்சல் வருமா?
விதி என்று வீராப்பு பேசினாலும்
சதி தானோ என்று
நினைக்கும் குழந்தை மனசுக்காரி நான்!!!

நட்டுவக்காலிகளின் ராச்சியம ;!

நட்பு எனும் நாடகத்தில்
நட்டுவக்காலிகளின் ராச்சியம்..
புனிதமிகு உறவாம்!
புழுவை வி;டவும் ஒன்றமில்லா
கேவலமான பூச்சியம்!
பதவி பணம் இருந்திட்டால்
பழகிடும் ~கண்ணே| என்று..
குறை அதில் கொஞ்சம் வந்தால்
குறி வைக்கும் பின்னே நின்று!
மனதுக்கு தர வேண்டுமல்லவா
ஆறுதல்...நடப்பதிங்கே அன்புக்கும்
வஞ்சம் செய்திடும் மாறுதல்!
இதயத்துள் தீ மூட்டி எரிக்கும்...பின்
இருப்பவரை கோள் மூட்டி பிரிக்கும்!
அறிவில்லா தலைகள் பகரும்
பால் போன்ற உறவிது என்று..
அநுபவ உள்ளங்கள் அறியும்
பாலல்ல கள் இது என்று!
துன்பங்களை கொட்டி விட்டால்
பலர் முன்னால் வெட்டி விடும!;
கவலை போக்க இந்த களங்கம் எதற்கு?
இருக்கிறதே இருட்டும் தனிமையும்
துணையாய் அதற்கு!!!!

பெரிய புள்ள......!

எல்லாமே முடிஞ்சி போயாச்சி
நானா!
கெணத்தடியில் தேப்ப குட்டியும்
புல்லு வெலக்கி பெத்தாவும் பிடிச்சமே...
பேரக்கா| வித்த காசில கிரிடொபி
சாப்பிட்டமே...!
போற வார பஸ்ஸ_க்கெல்லாம்
~கெட்டம்பொல்| அடிச்சி மாட்டியது...
அமரய்யா கடயில கெழங்கெடுத்து
அடுத்த தோட்டத்துல விறகொடித்து
கட வச்சி வெளயான்டது....
லொக்கெட் மரத்து உச்சியிலேறி
கன்டக்டர் ட்ரைவரா கற்பன பண்ணி
கீழ வுழுந்து காலுடஞ்சது....
வாகனம் கொளுத்தும் திட்டம்
உம்மாகிட்ட மாட்டினது..
அந்தி வரை ~போக்| ல ஒழிஞ்சி
இருட்டினதும் பயந்து செத்தது...
பள்ளிக்கு ஓதப்போயி
அஸருக்கு அஸரத் போனதும்
சொல்லாம கொள்ளாம ஓடி வந்தது.
உங்கட தமுழ் ஹோம்வேர்க் ஐ நானும்
ஏன்டதை நீங்களும் திருத்தமா செஞ்சி
வெரிகுட் எடுத்தது......
யாருமில்லா நேரம் பாத்து
மாவு சீனி களவாண்டி திண்டது....
அரிசி போட்டும் புறா சிக்காததால்;
அழுது பெரட்டியது...
சிரட்டை அடுக்கி...விக்கட் வச்சி.
ஜுட் ராஜா சமிந்த எல்லோருமா
நடு ரோட்டில க்ரிக்கட் அடிச்சது!
ஹ்ம்ம்..
எல்லாமே முடிஞ்சி போயாச்சி
நானா!
கொழும்புல நீங்க வேலன்னு
பெருமயா பேசிக்கிறாங்க....
நான் தான் ஊட்டுக்குள்ளேயே
வெந்தழியிறேன்!
ஏன் என்டால்....
நான் தான் வயசுக்கு வந்துட்டேனாமே?!!!

சூழ்நிலைக் கைதி !

அழுத்தமாக ஒரு வார்த்தை..உன்
அதரம் விட்டு வெளி வந்தாலும்
இரும்புருக்கி சொருகியது போல
இதயத்தில் வலியெடுக்கிறது!
சூழ்நிலை கைதியாகி
சுகம் நான் கண்ட பின்பு
அகம் முழுவதும் வியாபித்து விட்டது
அழிக்க முடியாத சோகம்!
எனை நானே தேற்றிக் கொள்ள வேண்டிய
வரட்டுப்பிடியில் சிக்கி
சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது பற்றி
எனக்கும் விளங்குகிறது தான்!
தேசம் விட்டு
பல மைல் தாண்டி... உன்
நேசம் மட்டும் தேடியே ஓடி வந்தேன்!
நீயோ எனை வெளி
வேஷக்காரி என்றெண்ணி அன்பில்
மோசம் செய்து துவம்சிக்காதே!!!

மனித நேயம்

மரணித்துப் போய் விட்ட பின்
அதனை உயிர்பிப்பதென்பது எவ்வாறு?
காலப் பேரலை என்னையும் தான்
மாற்றிப் போட்டு விட்டதே?
நான் மட்டுமென்ன விதிவிலக்கா?
வியர்வையும் தன்
நாசியை மூடிக்கொள்ளும் படியான
சனக்கூட்டம் அங்கே...
தொண்டையில் நீர் வற்றினாலும்
எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை
~சீட் பிடிக்கும் தைரியம் மட்டும்!
முன்பெல்லாம் மனசிலாவது
இடமிருந்தது.....
இப்போது மருந்துக்கும்
அது இல்லை.
பருவ வயதுப் பெண்ணும்
தள்ளாடும் கிழவியொருத்தியும்
கால் கடுக்க நின்றவாறங்கே
பஸ்ஸ{க்குள்!
யாருக்கு இடம் தரலாம்???
சபலப் புத்தி எனை கட்டிப் போடுகிறது!
நியாயம் இடையில் அடிபட்டு
செத்ததால்...வாக்கு வாதமே
க்ரீடம் சூட்டிக் கொள்கிறது!
கிழவிக்காக நான் இளகினாலும்
ஏதோ ஒன்று மனசை
முறுக்கிக் கட்டிக் கொண்டே!
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்
மனசாட்சி எரிந்து சாம்பலாயிற்று...!
இளமையின் பிடிகளுக்கிடையில்
மோட்சத்தைப் பற்றி
எங்கே நினைப்பேன்?
அப்போது....அதோ...
பருவ வயதுப் பெண்ணுக்கு
ஆசனம் அங்கே அதிஷ்டவசமாய்!
ஸ்ருதியிழந்த பாடலானேன்!
இப்போது எந்த சலனங்களும்
இல்லை தான்....
எனினும்
கிழவிக்கு இடம் தர மறுத்த
அந்த ஏதோ ஒரு அவஸ்தை
மெதுவாக.... மிக மெதுவாக.....
அடங்கிப் போகிறது!!!

இவளுக்கென்றொரு மனம் !

சூரியன் அஸ்தமனமாகும் வேளை தனில்
என் ரணமாகிய நினைவுகள் விழித்துக்கொள்ள...
நிலவு மறையும் காலைகளில்......
போலி ஒளிக்கீற்றுகள் பரப்பி
விடப்பட்ட நிலையில் நான்!
வானுள் புதைந்து போன நட்சத்திரங்களாய்
ஆயிரமாயிரம் வாட்டங்கள் வெளிப்பட முடியாமல்
தவிக்கிறது!
உலகத்தின் பார்வையில் ....
வாதித்தால் நான் வாயாடி
அடங்கி நின்றால் திமிர்காரி
கோபப்பட்டால் அடங்காப்பிடாரி
சமாளித்துப்போனால் ஏமாளி!
இப்பட்டங்கள் அப்பட்டமாகவே
சொல்லப்படுகையில் கொதிக்கும்
எண்ணெய்யில் இதயம் விழுந்தாட் போல!
என்னுள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை
எல்லோரும் அறிவதில்
ஏனோ எனக்கு உடன்பாடில்லை...
என்னில் உற்பத்தியாகும் சில வினாக்களுக்கான
விடைகள் இன்னும் ஓர் பூர்வீகத்தின்
சுவடுகளுக்குள் ஒழிந்த படியே!
அதனால் தானா எல்லோரும்
சந்தோஷ வாசலில் வாழ...
என் உயிர் மட்டும் ஊசலில் வாடுகிறது???

வருகையும் பொய்மையும் !

படை வீரர்களுக்கு மத்தியிலும்
தேடுகிறேன் என்னவனை!
நாட்டுப்பற்றெல்லாம் ஒன்றுமில்லை...
எனை பிரிந்த சோகத்தை தற்காலிகமாக
இடை நிறுத்தத்தான்.....
இந்த மௌன யுத்தம் என்பதை நன்கறிவேன்!
காதலினை கண்ணியமாகத் தான்
சமர்பித்தான்...
அன்பினை முழுமையாகத் தான்
ஒப்புவித்தான்!
அன்று....
வரம்பு என்ற வட்டத்துக்குள்
கட்டுப்பட்டிருந்த பட்டம் நான்!
வெடி பட்டான் என்றறிந்து
இடி ஒன்றை சந்தித்தது உள்ளம்!
அன்பின் ஆழத்தை பிரிவின் நீளத்தில்
உணர்த்தி விட்டுப் போன பின்...
~.;;...வேண்டாம் வந்து என்னை உனதாக்கிக் கொள்|
என்று பல விண்ணப்பங்களும் போட்டாயிற்று!
எனினும் சமாதான ஒப்பந்தம்
போலவே பொய்யாகிப் போய் விட்டது
என்னவனின் வருகையும்!!!

என் நந்தவனத்து புஷ்பமே!

காதலோடு நீ என்னை
பார்க்கிறபோதும் - அதனால்
என் கவலைகளை தீர்க்கிறபோதும்
வாழ்வின் வசந்தம் புரிந்ததம்மா!
உனைக்காணும் முன்
கோழையாய் இருந்த எனக்கு
காலை மாலையெல்லாம்
காதலிக்க கற்றுத்தந்தாயே...!

வாலிபக் காற்றே !
உன்னால் புரிந்துகொள்ள முடியுமா?
நீயில்லாமல் என் ஜீவன் இல்லையே!
நீ முகம் சுளித்தால்கூட
கண்ணீருக்கு
நான் தத்துப்பிள்ளையே!
காலைகளில் காதுமடலருகே
இன்பமாய்த் தவழும்
உன் சத்தமும்...
அணைத்த படியே
அன்பாய் நீ தரும்
முத்தமும் தென்றலாய்மாறி
எனைத் தீண்டிச்செல்லும்!
உன் ஸ்பரிசத்தால் நான் இன்னும்
என்னென்ன ஆவேனோ?
உன் அன்பால் சுருண்டு
உனக்குள்ளே வாழ்வேனோ?
என் நந்தவனத்து பு~;பமே!
நீயின்றிய என் வாழ்வில்
இதயத்துடிப்பு சொற்பமே!
வா!
வந்தென்னை உடனே ஆக்கிரமித்துக்கொள்
உனக்குள் என்னை சீக்கிரம்
ஒளித்துக்கொள்!!

சொல்லி(ல்) அடங்காத சோகம்!

பாசம் வைத்த எல்லோருமே
பாதியிலே பிரிந்தது போல்
நேசம்கொண்ட நீயும
நெஞ்சில் முள் தைக்கிறாய்?
உனை பிரியக்கூடாதென்ற ஆதங்கத்தில்
ஊனுறக்கம் மறந்து அழுததெல்லாம்
பேய் போல் எனைக்காட்டி
பேசவிடாமல் செய்கிறதோ?
கண்ணீரே என் உறவாகி
கவலைகள்மட்டும் எனக்கு வரவாகி
இதயத்தைக் கொல்வது போல்
இம்சை ஏதும் இருக்கிறதா?
காதலியின் கால்களைக்கூட
காதலுடன் முத்தமிட்டு
அணைக்க நினைத்தாலும்
அனைத்துக்கும் கடும் சத்தம்தான்!
பலரின் மத்தியிலும் சகியே
நீயென்னை பரிகசித்த போது
பாவியென் மனம் என்ன
பாடுபட்டிருக்குமென்;றும்
கொஞ்சமாவது பார்க்கலியே?

கடலளவு நேசம்!

உன் திருமணத்தின் பின்
நான் வெறுமனே ஆகிடுவேனோ?
எனைப் பிரிந்து ஓடிவிட்டால்
இதயம் எரிந்து வாடிடுவேனோ?
வற்றாத நதியாய் உன்மீது என்
நெஞ்சில் காதல் வெள்ளம்!
எனைவிட்டு நீ சென்றால்
மனமெப்படி தாங்கிக் கொள்ளும்?
காட்டிடாதே அன்பிலே
எனக்கு தட்டுப்பாடு...
கவலை தந்த எனை மன்னித்து
அன்பால் கட்டுப்போடு!
இதயத்தில் படர்ந்துவிட்டாலய்
வேராக...
எனைத்தனியாக பரிதவிக்கவிடாதே
வேறாக...!
அழுதிடுவேன்...
உன் நினைவுகளில்
விழுந்திடுவேன்...
நின் நன்மை வேண்டி இறைவனை
நிதமும் நான் தொழுதிடுவேன்!
துடிதுடிப்பேன்... நான்
கண்ணீரும் வடிப்பேன்!
நெஞ்சிலிருக்கும் உன் பெயர்
தினம் தினம் தவறாது படிப்பேன்!
உடலளவில் நீ
தூரதேசம் சென்றாலும்...
கடலளவு நான் கொண்ட
நேசம் வற்றாது ஒரு நாளும்!!

சூறாவளிக் காதல்...!

தூரே இருந்தபோது...
வார்த்தைகளில் கூட காதல்
தூவானம் பொழிந்தது!
அருகில் வந்தபிறகு...
அனைத்தும் மாறி காதல்
எனைப்பார்த்து
தூவென காறித்துப்புகிறது!
யாரிடமிருந்தும்
சந்தோசங்களைப் பறிக்கவில்லை - நான்
ஒருபோதும் காதலின் பெயரால்
வேசமும் தரிக்கவில்லை!
சூழ்ச்சிகள் செய்து ஒருநாளும்
நேசம் கொள்ளவில்லை - எனினும்
என் காதல் உள்ளம் சதாவும்
வீழ்ச்சி காண்பதுபற்றியும் தெரியவில்லை!
எதுகையும் மோனையுமாய் இருந்த
நம் காதல் இன்று
முன்னுக்குப் பின் முரணாகுவதை
அறிந்தவள் நான் மட்டுமே!
தீபாவளியாய் சந்தோசம் கண்ட
என் உள்ளத்தில் தற்போதெல்லாம்
சூறாவளி பயங்கரமாய் சுழன்றடித்தபடி!
அன்று
காவலனாயிருந்த கோவலன்
கேவலனாகிவிட்டான்...
இன்று
அன்பாய் பழகிட்ட நானும்
வம்பாகிப்போனேனோ?
நம்பி வந்த சொந்தமெல்லாம்
என்ன ஆனதோ...?
எல்லாமே எனை ஏமாற்றி
மண்ணாய்ப் போனதோ..?
திகட்டிக் கொண்டிருந்த
என் பிஞ்சு உள்ளத்தில்
இப்போதெல்லாம் ஏதோ
ஒன்று தெவிட்டியபடியே!
நாவினால் சுட்ட வடு... ஒரு
நாளிலும் மறக்க முடியாது!
கசிந்துருகிக் கெஞ்சினாலும் இனி
உன் மனம் என் வசம் படியாது!

இயற்கைக்குள் தொலைந்தபின்...

ஐயோ!
நான் படும் வேதனையை அந்த
சூரியன் பட்டிருந்தால்
பட்டப்பகலிலே இருளுக்குள்
மறைந்திருக்கும்!
என் சோகம் சொல்லிட்டால்
நட்சத்திரங்களும்
குறைந்திருக்கும்!
கவலைகளுக்கு என்நிலை
தெரிந்தால் பாவம் என்று
விலகியிருக்கும்!
பிரச்சினைகளுக்கும் புரிந்தால்
ஓசைப்படாமல்
ஒதுங்கியிருக்கும்!
என்னை வதைப்பதைக் கண்டு
நம்பிக்கைக்கே தன் மீது
நம்பிக்கையின்றி போயிருக்கும்!
எதிர்காலம் பற்றிய என்
பயத்தைக் கண்டால்
பயம் கூட உடனே ஒளிந்திருக்கும்!
கண்களில் ஊறும்
கண்ணீர்கூட வருத்தத்துடன்
வற்றியிருக்கும்!
மனசிற்கு விளங்கிருந்தால்
மங்கிப் போய்
மரத்து விட்டிருக்கும்!
உள்ளம் கொஞ்சம்
அறிந்திருந்தால்
உடனேயே எழும்பாதபடிக்கே
உறங்கியிருக்கும்!
இதயமாவது புரிந்திட்டால்
துடிப்பையாவது
நிறுத்திக் கொள்ளட்டும்!!

Monday, May 11, 2009

மலையக மாதின் மனக்குமுறல் !

தூபங்களிட்டாற் போல
சாபங்கள் நீங்குறதேயில்ல...
வேர்வை வர ஒழைச்சும்
வேதனமோ பசியாற்றல்ல..
கோர்வையா வெலயேத்தம்
கோமானுக்கு இரக்கமில்ல!
மலையகத்தில் கம்பீரமாக
வேதனை nனும் மால....
நிரந்தரமா என் அகத்தில்
துயரத்தின் ரேக!
தேயில சுமை முதுகில்
வாழ்க்க சுமை மனசில்;;;;;;....
புருஷன் சம்பளத்தோட
சாராயக் கடையில!!
ஆயிரம் ப்ரார்த்தனை
என் உள்ளத்தில் விரியுது..
நீண்ட நாளாய் அடுப்புக்கு பதில்
வயிறும் எரியுது.!
நாட்டின் நன்மை கருதி
தேகம் அழியிது
தேயில காட்டில்.....
முன்னேற்றம் துளியுமின்றி
காலம் கழியிது
அதன் பாட்டில்!
மலநாடு சாதனை புரியுது
சரித்திரத்தில் மட்டும்...
துரத்தும் தரித்திரம்
எப்போ ஒழியுமோ
எங்கள விட்டும்????

மௌனமாய் ஓர் விண்ணப்பம் !

ஆழ் மனசில்
வளர்த்திருக்கிறேன்
சொல்ல முடியாத ஆசைகளை
அதனால் நீ
புரிந்து கொள்
என் மௌன பாஷைகளை!
கடந்த நாட்கள்
கவலை கொண்டேன்
ஏன் தான் பிறந்தேன் என்று..
பிறவிப் பயனை
உணர்ந்து கொண்டேன்
உனை சந்தித்த அன்று!
தொலைவானம் பார்த்து நான்
வாழ வெறுப்பை சுமந்து
நின்றேன்......
தொலைபேசியில் நீ கிடைத்தாய்
வாழ விருப்பு
என்றுணர்ந்தேன்!
எல்லோரிலும் நான் கண்டது
எனை எரிக்கும் தீ..
வாழ விருப்பும் அன்பும் சேர்த்து
எனக்களித்தது நீ!
உன் வதனத்தில் மலர்ச்சியாம்
பலர் சொல்ல கேட்டேன் நான்...
நாளெல்லாம் இது தொடர
படைத்தவனை கேட்பேன் நான்!
பார்வையால் என்றென்றும்
இதயத்தைத் துளைக்கிறாய்...
எப்போது எனை உனக்குள்
ஒளித்துக் கொள்ள இருக்கிறாய்??
எனை நோக்கி நீ இருப்பது
புகைபடத்தில் மட்டுமா?
என்றென்றும் நீ வேண்டும்
என் ஆவல் கிட்டுமா?
எல்லாமே உளறி விட்டேன்
வெட்கத்தை விட்டு
என்னவனே போகாதே
உன்னுடைய என்னை விட்டு!!!

அக்கறை(ர) !

ஏடாகூடமாய் ஏதாவது
சொல்கையில் எல்லாம்......
போடா பொறுக்கி என
சிணுங்குவாயே!
வாடாத பூவாய்
எண்ணியிருந்தேன்...
நீயோ
சோடாவாய் மாறி
சீறியதும் ஏன்??
காதலியாய் உனை
எண்ணியே
பேதலித்துப் போனது என்
மரமண்டை......
எத்தனை முறை
அரங்கேறியிருக்கும்
எனக்கும் உயிருக்குமான
மௌன சண்டை??
இறைவன் நடத்திய
விளையாட்டில்..........
நீ தான் குடிவந்தாய்
என் மன வீட்டில்!
சித்த பெய்த மழையும்
சங்கமிக்கிறதே
பூமியுடன்..........
மொத்த காதலை காட்டியும்
இணைய விருப்பமில்லையா
இந்த பாவியுடன்!
உன்னில் எனக்கிருக்கிறது
மிகையான அக்கறை...
உனை அடைவேன் நிச்சியமாய்
நீ சென்றாலும் உலகின்
அக்கரை!!!

Thursday, May 7, 2009

நெஞ்சில் உறங்கும் நெருஞ்சிகள் !

இரத்தம் கொட்டிக்கொண்டிருந்த
என் காயங்கள்
சிறிது ஆறினாலும்
ரணப்பட்ட தழும்புகளை
அடிக்கடி தடவிப் பார்க்கிறது
விதியின் கைகள்!

அப்போதெல்லாம்
உலகத்தின் இருட்டுகள்
யாவையும் ஒரே உருண்டையாக்கி
நெஞ்சுக்கூட்டில்
உருட்டி விட்டதாய் உணர்கிறேன்!

பல் இடுக்குகளில் சிக்கிக்கொண்ட
சோற்றுப் பருக்கைகள் போல
உள்ளுக்குள் இறந்த காலத்தின் நினைவுகள்......

தூசு படிந்த என் மனக் குமுறல்களை
அடிக்கடி கூற
எனக்கு இஷ்டங்கள்
அறவுமில்லை தான்!!!

வலிகள் தந்த வழிகள் !

தூரலாய் வந்து என் மனசில்
சங்கமமான மழைத்துளிக்கு
என் இதயம் வெடித்து
சிதறப் போவது பற்றி சிலநெரம்
தெரிந்திருக்கலாம்!

ஒளிக்கீற்றளவு சந்தோஷங்களை
உள்வாங்க நான் எண்ணயது
இறைவனின்
இயற்கை வண்ண கலையில் தான்!

தன் மடியிலே
அலைகளை
ஆராதித்துக் கொண்டிருக்கிறது
கடல்!

தூய அன்புடன்
அலையைத்தழுவ முற்டும் போதெல்லாம்...
ஏமாற்றி விட்டு கரையைத்தானே
அணைக்க விளைகிறது இந்த அலை??


வெண்முகில் கூட்டங்கள் உன்று கூடி
கருமையை உருவாக்குவது போல்
சின்னச்சின்ன கவலைகள்
தம் வலைகளுக்குள்
என்னையும் வலுக்கட்டாயமாக
உள்ளீர்க்கிறது.

மழையில் நனையும் மனசு !

மழைநீரின் ஈரமான அரவணைப்பில்
சோகம் தீர்த்துக் கொள்கிற
வரட்டுப் பாசியினங்களைக் காண்கிறேன்!

நான்.......
போலிச் சிரிப்புகளை கையாள்வதெல்லாம்
உள்ளத்தில் புதையுண்டு போன
வலிச் சுவடுகளை
முடியுமட்டும் மறைக்கத்தான்!!

கொடிக் கம்பங்களில் எல்லாம்
கேட்பாரற்று தழைகீழாக தொங்கும்
ஆடைகள் போன்ஆற............
எதிர்மறை எனும் சிந்தனைக் காற்றில்
என் இதயமும் பல திசைகளுக்கு
முகம் திருப்பியவாறு!!

வெளுத்தும் வெளுக்காமலிருக்கும்
வானத்திலிருந்து
ஒரே இடைவெளியில்..

வெயிலும் தூறலும் புறப்படுவது போன்று
சோகங்களையும் சுகங்களையும்
மறைக்கத் தெரியாத மனசெனக்கு!!

இன்னும் உன் குரல் கேட்கிறது !

நீ
நான்
நம் காதல் மீது
நாம் கொண்ட தீவிரம்!

எல்லாமே இருட்டடிப்பு செய்யப் படப்போவதாய்
நீ சொன்ன போது
அமிலத்தை
நெஞ்சில் கொட்டியதாய் உணர முடிந்தது என்னால!

கண் பார்த்து........... கை கோர்த்து
கவிக் குழந்தைகளை தாலாட்டினோமே....
எல்லாம் மறந்து போயாச்சா?
இல்லை அத்தனையும் பொய் ஆச்சா?

உள்மனசில் நீ
உறைந்து கிடந்த போதெல்லாம்
இளகிப்பிரிவாய் என்று சத்தியமாய் நினைக்கவும்
முடிந்ததா என்னால்?

பிரிவுகள் நிரந்தரமில்லை தான்..
எனினும்
உறவுகளில் உதாசீனம் ஏற்படும் என்பது உண்மை தானே?


~நீ தான் என் எல்லாமே|
என அடிக்கடி நீ சொன்னது
இன்னும் ஞாபகமிருக்கு..

~குயிலே|! உனதந்த குரலின்னும்
காதுக்குள் ஈரமாய் கேட்டக்கிட்டிருக்கு..

உன் இதயத்துடிப்பையும்
ரத்த ஓட்டத்தையும் ஆராய்ச்சி செய்து பாரேன்...

என்னை மட்டும் தானே அவை எல்லாம் சுமந்துக்கிட்டிருக்கு??

அப்படியிருக்க உனக்கெப்படி முடிந்தது
எனை உதறி விட்டு மணப் பெண்ணாய் மாற???

ப்ரியவாணி பிரிய வா நீ !

என் கண்களுக்கு ஓய்வென்பதே கிடையாதா?
சதாவும் கண்ணீர் பிரவாகம் ஊற்றெடுத்த படியே இருக்கிறதே...

தயவு செய்து மரியாதை போர்வையில்
காதலிகளாடும் வேஷம்....
அந்த மரண அவஸ்தை....
எனக்கும் வேண்டாம்!


கல்யாண பத்திரிகை எனும் பேரில்
கத்தியை சொருகாதே
நீ திருப்பித்தந்த இதயத்துக்குள்!

வேறொருவனின் ஒருத்தியாக
மாறி விட உன்னால் முடியும் என தெரிந்து விட்ட பின்னால்
உன் மீதான என் தேடல்களில்
அர்த்தங்கள் ஏதுமில்லை!

நான் பிரிய நினைக்கவில்லை
நீ துணிந்து விட்டாயே?

ப்ரியமாயிருந்தவளே!
ஊடல்கள் எம்முள் ஊற்பத்தியாகு முன்
ப்ரியமாய் பிரிய
விடை கொடு முதலில்!!!

ரகசிய சிநேகிதிக்கு !

வறண்டு கிடந்ததே
என் இதயப் பாலைவனம்....
வந்தாய் நீ தேவதையாய்
இப்போ அது ரோஜாவனம்!!

கண்கள் தரிசித்தன
உன் மென் பாதங்களை...
திருவாய் நீ மலர்ந்தால்
ஏற்பேன் அதை வேதங்களாய்!

சத்தியமாய் உனை காதலிக்க
நினைக்கவில்லை முதலில்....
எப்படி பச்சை குத்த முடிந்ததோ
உன் பெயரை என் இதழில்?

உன் அணைப்பின் சுகத்தில்
அணைந்து போயிற்று
அனைத்து வித கவலை...
பிணைப்பால்
இதயப்பிணி தீர்த்து
ஏற்றுக்கொள் இவளை!

நாம் தனித்திருந்த அறைகள் போல
வாசம் தருகிறது
இதயவறைகளும் தான்...
உன்னுடனான நாட்களில்
இதய வால்வுகள் கூட
ஆனந்த அவஸ்தையில் ஏன்?

குருதியில் கூட
உறுதி எனும் விரலால் தானே
வருடினாய்.....
வருத்தி எனை திருத்தி
எப்படி என் உள்ளத்தை
திருடினாய்?

பாச விதை நட்டிருந்தேன்...
நேச விருட்சகம்
எட்டி விட்டாய்...
துகள்களான இதயத்தை
அன்புப் பசையால்
ஒட்டி விட்டாய்!!

இலக்குகளற்ற வாழ்க்கையை - விடி
விளக்காக மாற்றினாய்...
கலகம் இருந்த மனசுக்குள்- முழு
உலக இன்பமும் ஊற்றினாய்!1

திசை மாறி தவித்த போது- விழி
விசை கொண்டு ஈர்த்தெடுத்தாய்...
மோதல் இருந்த உள்ளத்தில்
காதல் வில்லால் போர் தொடுத்தாய்!

காரிகை உன் கண் அசைவில்
கவியெழுதவும் கற்கின்றேன்...
தூரிகையாய் உனை ஏற்க
ஓவியமாய் நிற்கின்றேன்

கரையான் பக்கங்கள் !

மழை கருக்கொள்ளும்
படிமங்களில் எல்லாம்....
எரிந்து போன என் சுவாசத்தின்
சாம்பல் எல்லாம்
உருப்பெறுகிறது....

எரிமலையில் பூத்துப் போன
மலர்களுக்கு....
வேர்களின் வேதனை புரிவதேயில்லை!

குருதி வழியும் கொடூரங்களின்றி
இருக்கும் ஆகாயம் நோக்குகிளேன்...
ஓ.....
ஒரு காலத்தில் பூமியின் காதலனாமே அது?

சாக்கடையில் பூத்ததென்றும்
பூக்கடையில் வேர்த்ததென்றும் பாராமல்..
புணர்ச்சி செய்து விட்டுப் போகிற தென்றலை
மிதித்து நசுக்க
யாருக்கிங்கே துணிவிருக்கிறது?

உண்மை தனை உரைத்து விட
செய்யப்படும் கட்டுமானங்கள்
எல்லாம்...
செப்டெம்பர் பதினொன்றாய்
இடிந்து போகிறது!

கனன்றெரியும் செந்தீயில்
குளித்தெழுந்தாலும்....
தங்கத்துக்கு மட்டும் ஏனோ
தீக்காயங்கள் அறவேயில்லை!

தேசம் விட்டு பறந்து திரியும்
பறவையின்
வலியுள்ள சிறகுகள் பற்றி
யாருக்குத் தெரியும்?

வெறும் பார்வை ஒன்றினால் தடவி
ஒத்தடம் பெற்ற ரணங்கள்....
சொற் கோர்வையினால்
மீண்டும் மீண்டும்
குதறப்பட்டுக் கொண்டே!

ஒவ்வொரு தடவையும்
மிக சுவாரஷ்யமாக
ஆரம்பிக்கப்படும்
என் வாழ்க்கை நாவலின்
இறுதி அத்தியாயங்கள் மட்டும்...........
எப்போதும் கரையான்
தின்றதாகத்தான்!!!

விஷம் கக்கும் விட்டில்கள் !

காந்தல் மலரின் வாசம் எண்ணி- உன்
கூந்தலை அளைந்து விளையாடிய
போதெல்லாம்......
பின்னாட்களில்
அது தேளாய் கோட்டும் என்று
நினைக்கவில்லையடி....!

உதட்டோர உன் சிரிப்பின்
உள்ளரங்கத்தில்
ஊர்ந்து திரிந்ததெல்லாம்....
விட்டில் போல் உரு காட்டி
விஷம் கக்கும் விட்டில்கன் என
அறிந்திராத அப்பாவி நான்!

நின் கைத் தொடுகையின
வெப்பத்தில் கூட..
எனை எரித்துப் போடுகிற
கணற்கட்டைகள் இருப்பதாய்
கற்பனையும் வந்ததில்லையே எனக்கு??

என் கைகளில் புத்தக ஏடுகளில்...
மேசையில் எல்லாம்
பொறிக்கப்பட்ட உன் நாமங்கள்........

எனை கிழித்துக் கூறு போடப் போகும்
சாபமிகு ஆயுதமாயம
மாறுவதைக் கூட அறியாதளவுக்கு..
என்ன இயலாமை வேண்டிக் கிடந்ததோ
எனக்கு?????

Monday, May 4, 2009

விஷ வித்தை

காசுக்கு பொருட்கள்
விற்கப் படலாம்
இதயமுமா?

காதலுக்காக எதையும்
இழக்கலாம்
காதலியையுமா?

வஞ்சிப்பதற்காகத் தான்
நெஞ்சுக்குள்
குடி புகுந்தாயா?;

எத்தனை முறை
என் காதலை
விளங்க வைப்பேன்
நானும்?

எத்தனை முறை
தன்மானம் விட்டு
பேசுவேன் இனிமேலும்?

~கத்தியில் நடப்பது போல
பேச வேண்டும்|
என்றதெல்லாம்
இதயம்
காயப் படக் கூடாதென்று
தானே?

சாகத் துடிக்கும் உயிருக்கு
விஷம் தடவி
காப்பாற்றும் வித்தையை
எங்கு கற்றாய் நீ?

அடுப்புக்குள் விழுந்த
ஓர் விறகாக என்
உயிருடல் தகிப்பது
உனக்கெங்கே தெரியும்????

நான் வசிக்கும் உன் இதயம்

உன் நேசத்தால் எனக்கு
ஆறுதல் வேண்டும்...
அதனால் இதயத்துக்குள்
சந்தோஷ மாறுதல் வேண்டும்!

ஒரு தருணமேனும் உணவெனக்கு
ஊட்ட வேண்டும்.....
அன்புடன் பல செல்லப் பெயர்
சூட்ட வேண்டும்!

கனிவுடன் பாசமதை
தர வேண்டும்..
அஃது ஆழ் மனசிலிருந்து
வஞ்சகமின்றி வர வேண்டும்!

காதல் எனும் தேசத்தில்
தனியே ஆள வேண்டும்..
மாறதமல் இது என்றென்றும்
நீள வேண்டும்!

மடி சாய்ந்து கொஞ்ச நேரம்
அழ வேண்டும்..
உன் பாதம் தொட்டு
சில கணம் நான் தொழ வேண்டும்!

உனை அணைத்துக் கொண்டிருக்க
அந்தி மாலை வேண்டும்...
அதற்கு....
உன்னவளாய் எனக்கொரு
வேலை வேண்டும்!!!!

பொதி சுமக்கும் நினைவுகள்

உன் காரசாரமான
வார்த்தைகளை
அசை போட்ட படியே
பலமிழந்து விட்டிருக்கும்
இதயத்துக்கு
என்ன மருந்து தந்து
உற்சாகப் படுத்துவாய்?

ஊடலை
யார் மேற்கொண்டாலும்;;;;...
தேடிப் போக வேண்டியது
எழுதப் படாத
எனக்கான சட்டம்!

சொல் பேச்சை கேட்குமாறு
ஷெல் வீச்சை வீசுவது...
அவமானப் படுமென்னால்-நீ
வெகுமானம் காண்பதற்கா?

மறவாதே!
கூந்தல் கட்டி நீ ஆடிய இடமோ
இதயமென்ற
;ஊஞ்சல்!

சதி செய்து எனை மறந்தாலும்....
பொதி சுமப்பேன் உன் நினைவுகளை
என் நெஞ்சில்!

மழை ப்ரியம்!

என் ப்ரியத்தை மழையாக்கி
உனை அதில் நனைய விட்டேன்
நீயோ போலிகளை தினம் காட்டி
தீ கொண்டு எரித்துப் போட்டாய்!


பாசாங்கு செய்வேரை
ஆங்காங்கே கண்டிருக்கறேன்..
பாசத்தை அலட்சியமாய்
பயன்படுத்தியவள் நீ தானே?

உனை விட அழகிகளை
ஊரிலேயே கண்டிருக்கிறேன்..
உண்மையாய் மனசுக்குள்
உலவ விட்டது உனை மட்டுமே!

நகம் கூட உனை தவிர
பிற பெண்ணில் பட்டதில்லை...
உன்னையன்றிய எவளையும்
மனசாலும் தொட்டதில்லை!

என் மனதின் இளமானே
முதற் காதலும் நீ தானே....
ஆதலால் நீ வெறுத்தாலும்
உன் நினைவுகளை மறவேனே!!!!

விதவைக் காதலி!

காதலனே!
என் இதயப் புத்தகத்தில்
உன் நினைவுகள்
பொன்னாய் பதிந்துள்ளன...

அவை ஒவ்வொன்றிலும்
நம் காதல் உள்ளங்கள்
அப்படியே பதிந்துள்ளன!;

பெண்களின் வாசத்தைக் கூட
அண்டாத நீ....
என் கண்களின் சேஷ்டையில்
கட்டுண்டது மெய் தானே?

கண் கலங்குகையில் எல்லாம்
ஆறுதல் சொல்லி அணைத்தாயே....
அத் தருணங்களில் எல்லாம்
நீயும் எனக்கு தாயே!

உன் உள்ளத்தில் நானிருப்பை
அறிந்த பின்னால்..
ஓ!இந்த உலகையே வென்ற
மகிழ்ச்சி எனக்குள்!

நான் கொண்டேன் சோகம்-இது
யார் தந்த சாபம்?

சூட நினைத்தேனே
உன்னுடன் பூமாலை....
உயிர் கொன்றுப் போனதே
காலனாய் வந்து ~காமாலை|!

உன்னால் நான்
பெறவில்லையே தாலி....
இன்று நானும்....
உன் ஞாபகங்களை
தின்று வாழும்
விதவைக் காதலி!!!

கருகிப் போன மனசாட்சி!

எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றத்தில் நிறைவுறும் போது
எதிலும் நாட்டமில்லாமல்
வேலை நிறுத்தம் செய்கிறது இதயம்!

அன்பு வார்த்தைகளுக்கும்
ஆசை முத்தங்களுக்கும்
உற்சாகம்கொண்டு தானே
ஓடி வந்தேன்............
உன்னை தேடி வந்தேன்!

நாடுகளுக்கிடையிலான
சிலபேச்சு வார்த்தை
ஒப்பந்தங்கள்
போன்றே
என் கனவுகளும்
தவிடு பொடியாகி விட்டன!

பிறரை சந்தோசப் படுத்த
நீ நினைக்கலாம்....
ஆனால் உன் மீது சந்தேகம்
துளிர்க்கிறதே?

சுடகாடொன்றில்
வெந்து தகிக்கும்
பிரேதங்கள் போன்றே
சில நேரம்;;;;;;;;;;;;;;;;;;;;...........
கருகித் தான் போகிறது
என் மனசாட்சியும்!!!!

சாத்தானிய வசனம்

ஏனென்று புரியவில்லை
என்ன செய்தேன் என்றும்
நினைவில் இல்லை.........

நாம் அறியாமலேயே
நம்மை பிரித்து விட்டிருககிறது
ஓர்; கண்ணாடிச்சுவர்!!!

இங்கிருந்து நானும்
இங்கிருந்து நீயமாய் காணலாம்
தொடுகைகள் ஏதுமின்றி!

சதாவும் என் காதுகளில்
எதிரொலிக்கும்
உன் மதுரக்குரலோசை........
இப்போதெல்லாம்
பேரிடியாய் மாறியதேன்?

~நான் உனக்கு மட்டும் தான்|
என்ற உன் சத்திய வசனம்...........
சாத்தானிய வசனமாய்ப் போயிற்றே?

நிராயுத பாணியாய் மாறி விட்ட
என் இதயத்தை விட்டு வைக்காமல்
என்னை முற்றுகையிட்டுக் கொண்டது சோகம்!

துப்பாக்கி வார்த்தைகள்
மனசை ரகளையாக்கியதால்.....
கரிய புகையாய் படிந்து கொண்டது துன்பம்!

மௌனமான முகாரிக்குள்
என் கண்கள்
தனக்கான தாலாட்டை பாடிக்கொள்கிறது!!

கடந்து விட்டன கணநாட்கள்
கண்ணுறக்கம் மறந்து....
படர்ந்து இருக்கும் முட்கள் தான்
நீ எனக்கு தந்த விருந்து!!

தூக்கம் கொடூரமாகி
என் இரவுகள் முத்தமிடுவதெல்லாம்....
உள்ளத்தால் அழுகிற
என் ஊமைக்காயங்களைத் தான்!!!