Thursday, February 26, 2009

சுழியோடும் இதயம் !நின்னை நான் நினைத்தது
நீ செய்த பிழையில்லை...
உன் மனசை நாடினேனே
எனக்குத்தான் தலையில்லை!

அகம் கேட்டுப் பழகினேன்-உடல்
சுகம் ஒன்றும் தேவையில்லை...
உன் அலட்சியங்களை தாங்கிட
என் இதயம் ஒன்றும் பாலையில்லை!

உன் இதயத்துக்குள் வந்த நான்
இடையிலேயே போகிறேன்....
மீதியுள்ள வாழ்நாளில்
தனியாகவே சாகிறேன்!

ஈரமுள்ள நெஞ்சுக்குத் தான்
இதயத்தில் வலியெடுக்கும்....
அன்பு நதியில் நீச்சலடித்தால்
இறக்கும் வரை சுழியடிக்கும்!

காதலை தூதனுப்பி....!என் உள்ளத்துக்குள்
பேனை விட்டு....
என் உயிரில் தொட்டு..
வார்த்தையள்ளி.....
மனசெழுதும் மடல் இது!

ரோசாப்பூவாய்
வாசம் கசிந்து
நெஞ்சக் கூட்டை ஆர்ப்பரித்த
நாட்களவை!

உனை பலரும்
விரும்பிய போதும்
ஏனோ நீ எனைக் கேட்டு
என்னிடமே
வார்த்தையாடினாய்!

சற்றும் குளிரெடுக்காத
நேரங்களிலும் குளிருவதாய்
பொய்யுரைத்து....
என் மார்புச் சூட்டில்
சுகம் காண
ரொம்பவும் பிடிக்கும் உனக்கு!

என் நரம்புகளினூடே...
உன் காதலை தூதனுப்பி
உணர்வுகனுக்கு உயிர் கொடுத்து
மொத்தமாய் உன் உறக்கம்
தின்றதும் நீ!

சூரியன்
கொட்டாவி விட்டெழுந்து
நட்சத்திரங்கள்
அழுது மறையும் முன்பே..
மிஸ்கோல் அடித்து
என்னை தொழ எழுப்பியதும் நீ தான்!

மொட்டவிழ்ந்த உன் மௌனம்..
வெகு காலம் செல்லு முன்பே
பூப் பூக்கத் தொடங்கியதேன்?

கனவுகளில் தினமும்
உன்னோடு கூடிய பாராளுமன்றம்
அறிவிப்புகளேதுமின்றி திடீரென
கலைக்கப் பட்டுப் போனது!
உன் அருகாமை
தந்த இங்கிதத்தில்..
வெறுமை முளைத்து
பட்ட மரமாய்
மாறிக் கொண்டது!

நிலவெழுந்து
முகம் கழுவும் முன்பே
தீயினை சாட்சி வைத்து
என் இதயத்தை போலவே..
அம்மியையும் மிதித்து
வேறொருவனுடன்
சென்று விட்ட பின்......
உனக்கான இந்த மடல்
அவசிpயமற்றதாய் உணர்கிறேன!!!;

எனக்கு பிடித்த உன் நேசம் !

காதலுக்கு தடையாயிருக்கும்
கடிகாரம் மீது
கடும் கோபம் எனக்கு!

இரவெல்லாம் கதை பேசி
அதிகாலையிலும் தழுவுவாயே...
இந்த சுகத்தில் தேநீர் கூட
தேவையிராது!

பசி மறந்து
அலுவலாய்
இருக்கும் போதெல்லாம்
ஊட்டி விடும் உன் நேசம்
ரொம்பவும் பிடிக்கும் எனக்கு!

குளித்து முடிந்ததும்
தலை துவட்டும் உன்; முந்தானை...
அது என் உயிரின் கவசம்!

துணிகளும் துவைத்து
எனக்கென சமைத்து..
உன் வருகைக்காய் காத்திருப்பாயே..
அந்த எதிர்பார்ப்பில்
கவலையையும் இன்பத்தையும்
ஒன்றாகவே அனுபவித்திருக்கிறேன்!

என் கண்ணீரையும் துடைத்துப் N;பாடும்
உன் கைகளுக்கு...
முத்தத்தால் வளையல் செய்து போட
ஆசை!

ஆறாத என் இதய ரணங்களையும்
ஒரே புன்னகையில் தடவும் போது..
தழும்புகளின தடயங்களும்
மறைந்து போகும் தெரியுமா?;

உடலாலும்
மனசாலும்
நான் சந்தோஷிப்பதற்காக
நீ செய்யும் சதா ப்ரார்த்தனையால் தான்
இன்னமும் நான்
உயிர் வாழ்கிறேனோ என்னவோ???

இருட்டில் தடுமாறும் ஒளியொன்று…..!

காலைக் கடித்த நாய் கூட
சில நேரம் வாலாட்டலாம்...

புல் தின்னாத புலியும்
பூனையை தன் மடியிலிட்டு
தாலாட்டலாம்!

பழமும் அமுதும் கொடுத்து
வளர்த்தாலும்..
மேனி மினுங்க புரண்டு
நெளிந்தாலும்...
கொத்துவதை தவிர
வேறொன்றும் தெரியாது
பாம்புக்கு!

மனிதன் என்ற பெயரில்
பேயாடும் ஒரு இடத்தில்
வாழ்க்கைப் பட்டிருக்கிறேன்!
பிறருக்காக சிரித்திருக்கும்
நான்;;;.....

உண்மையில் அழுவதற்கு கூட
மறுக்கப் பட்டிருக்கும்
காதல் கைதி!

என்னை மட்டும் தேர்ந்தெடுத்து
விளையாடிப் பார்க்கிறது
விதி!
பல இதயங்களிலிருந்தும்
தூக்கி எறியப் பட்டு
விழுந்தடிபட்டு
துடித்த போதெல்லாம்.....

என் தலை தடவிய
தனிமையே,பேனையே,இருட்டே
இப்போது
நீங்களெல்லாம் எங்கே
போய் தொலைந்தீர்கள்?

ஆறுதல் வேண்டி அலைகிற
என்னை மன்னித்து நீங்களாவது
ஏற்றுக் கொள்ளுங்களேன்!!!

சாலையோர பூக்கள் !இதயத்தை கேட்டவளுக்கு
உயிரையே தர
தயாராயிருந்தேன்..
சத்தியமாய்!
நம்பிக்கை இல்லை என்றால்
விண்கற்களிடம்
விசாரித்துப் பாருங்கள்..

விண்மீனாய் மாறி
என் காதல் சொல்லும்!
வியர்வை துளிகளை
நுகர்ந்து பாருங்கள்
என் காதலுக்கு சாட்சியாய்
வாசம் வீசும்!

செவ்வாய்க்கு சென்று
ஆராய்ச்சி செய்யுங்கள்....
அவளின் ~செவ்வாயில்
நான் சுருண்டதை
வெட்கத்துடன் பகரும்!

சேற்றில் பூத்த செந்தாமரை
பெற்றுள்ள மதிப்பு....
சாலையோர பூக்களுக்கு
இல்லை தான்!
வெட்டாந் தரையில்
வெறுமையாய் இருந்த போதும்
இப்படி மூளைக்குள்
வெம்மை பரவியதில்லை!
ஆனால்...ஆனால்
அநாதை என்று தெரிந்த பின்
எனை துரோகித்து வஞ்சித்தாயே...
நெருப்புக் கட்டைக்குள்
ஓடி புகுந்து.....
தற்கொலை முயற்சியில்
உன் இளமை!!!!

இயற்கைக்குள் தொலைந்த பின்....!ஐயோ!
நான் படும் வேதனைகளை
அந்த சூரியன பட்டிருந்தால்
பட்டப் பகலிலே
இருளுக்குள் மறைந்திருக்கும்!

உன் குணம் தெரிந்திருந்தால்
காற்றும் உன்னருகே வர
அஞ்சியிருக்கும்!

கவலைகளுக்கு
என் நிலை தெரிந்தால்...
பாவமென விலகியிருக்கும்!

பிரச்சினைகளுக்கு
என் மனம் புரிந்திருந்தால்
ஓசைப் படாமல் ஒதுங்கியிருக்கும்!

நான் வதை படுவது கண்டு
நம்பிக்கைக்கே தன் மீது
நம்பிக்pகயற்றுப் போயிருக்கும்!

எதிர்காலம் பற்றின
என பயமறிந்தால்....
பயமும் உடனே ஒளிந்திருக்கும்!

கண்களில் ஊறும் கண்ணீர் கூட
வருத்தத்துடன்
வற்றியிருக்கும்!

மனசிற்கு தெரிந்திருந்தால்
அது மங்கிப் போய்
மரத்திருக்கும்!

உள்ளம் கொஞ்சம்
அறிந்திருந்தால்.......
எழும்பாமலேயே
உறங்கியிருக்கும்!

இதயமாவது புரிந்திருந்தால்
துடிப்பையாவது
நிறுத்திக் கொண்டிருக்கும்!!!

உதிர்ந்த மலர் !பாருங்கள் கொஞ்சம்....
சாலையோர சாக்கடையில்
என் உடல் வீழ்ந்து கிடக்கிறது!

எச்சில் வழிய
நாக்கை தொங்க விட்டிருக்கும்
இந்த தெரு நாய்க்கு
என் நிலை தெரியாமல்
இல்லை!

என் பிணத்தை
காகங்கள் கூட
அண்டாமல் போவதேனோ?

ஆடை விலகிக் கிடக்கும்
என் அவயவங்களை மட்டும்
ரசிக்கின்றனர்...
மோகம் கொண்ட சிலர்!

மர்;மம் பேசும்
என் மரணத்துக்கு..
வேடிக்கை பார்க்கிற
இப் போலீசுக்கும்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பரிசோதிக்கச் சொல்லும்
டாக்டருக்கும் பங்குண்டு!

ச்சீ..என்ன இது?
வெண்கட்டிகளால்
சித்திரம் கீறிய படி....
நானென்ன
அலங்கார கண்காட்சியா?

நேற்று வரை
என் தலைவலிக்கு
வெறும் பெனடோல் தந்த
டாக்டரும்;;;.....
மஞ்சட் கடவையில்
மயங்கி விழுவதைக் கண்டும்
விசிலடித்து விளையாடிய
போலீசும்........
மர்;மம் பேசும்
என் மரணத்துக்கு..
காரணமானவர்கன் தான்!!!!

நீ குளிக்க என் விழி நீர் !


உன் பார்வை பட்டவுடன்
குருதியோட்டம் அதிகமாகிறது...

நீ வந்து போவதால்
பூந்தோட்டம் சுவனமாகிறது!

உனை காண்கையில் எல்லாம்
அன்புப் பறவை
உயிர்த்து எழுகிறது....

கவலை துன்பம் அதனாலே
உதிர்ந்து விழுகிறது!

கண்ஜாடையால் உன் காதல்
குறிப்பு தருகிறது....
அப்போது
என் இதழில் மெதுவாய்
சிரிப்பு வருகிறது!

அனுதினமும்
என் இதயம்
உன்னை காப்பாற்றுகிறது...

நீ குளிக்க
என் விழிகள் நீரூற்றுகிறது
உன் மௌனத்தால்
காதல் வினாடிகள் வீணாகிறது
ஆனாலும்
உன் நெருக்கம் எனக்கு தேனாகிறது!

என் கனவுகள் கூட
உன் மீது மட்டுமே படிகிறது;..
அந்த நினைவுகளுடனேயே
என் வானமும் விடிகிறது!

பிறவி செய்த பிழை !மனசில் பதிந்த எனை
மறந்து விட்டுப் போ என்கிறேன்..
நீயோ...
இதயமே நானாகி விட்டதாய்
இன்று வரை உளறுகிறாய்!

தாங்க முடியாத
வார்த்தைகளாலும்..
மன்னிக்க முடியாத
குற்றங்களாலும்..
துளைத்தெடுக்கிறேன் நான்!

நீயோ..
உன் உலகமே நானென்று
உறுதியாகவே உளறுகிறாய்!

உனை மட்டும் எண்ணியே
வாழ்நாளை கழித்திடுவேன்..
எனை மறந்து நீ..
உன் வாழ்வை வசந்தமாக்கப் பார்!

நடப்பதை யோசி
கிடைப்பதை ஆசி
சீனியற்ற தேனீரை சகித்துக் கொண்டே
குடிப்பது போல்.....
நீயற்ற பொழுதுகளையும்
நினைவுகளால்
சிறை படுத்திக் கொள்வேன்!
பிநவி செய்த பிழை தானே
பெண்ணாக பிறந்து விட்டேன்....

ஏற்கத் தான் உன்னால் முடியாது
உன் எதிர்காலத்தையாவது
சிறப்பாக்கிக் கொள்!!!

வரலாற்று குற்றவாளி !ஊசி முனையாய் கசிகிறது
உயிர்துளி!

ஜீவிதம் கசத்ததால்
தன்னை தானே
தண்டித்துக் கொள்கின்றன
என் ஒவ்வொரு அணுவும்!

தப்பெதுவும் உனக்கானதல்ல..
ஏனெனில்....
உனை காதலித்த முதல் தப்பு
என்னுடையதன்றோ?

என்னிடமிருந்து
விவாகரத்தாகின்றன
எனக்குள்
பொங்கிப் பிரவாகித்த
உன் ஞாபகங்கள்!

ஆசையாய்..
உனை அணைத்துத் தழுவிய
நினைவுத் தழும்புகள்
இன்று
அக்கினியாய் மாறி வதைக்கின்றன!

காதல் அத்தியாயத்தை
ஆரம்பித்து வைத்த
வரலாற்று குற்றவாளி
நான்!
அதனால் தானா
இதய ஏட்டை கிழித்துப் போட
நினைக்கிறாய் நீ?

வார்த்தை இடிகனின்
வலி தெரியாதிருக்க
நானொன்றும்
இரும்பு இதயக் காரியல்ல!

உன் நெஞ்சச் சிறையில்
ஆயுட் கைதியாய்
வசிக்க முயன்ற எனை
காதல் வரலாறு
மன்னித்து விடட்டும்!!!

விதி விழுங்கிய இன்பம் !நிலவெரியும் ஓர் இரவில்
விதியென்ற பாம்பு
முழுமையாய் விழுங்கிற்று
என் வாழ்நாள் இன்பத்தை!

கூரான கத்திரி முனைகளுக்குள்
அகப்பட்டது போல்...
என் சந்தோஷ காகிதமும்
சதாவும்
நறுக்கி அரியப் பட்ட படியே!
அன்புக்கும்
பொய்மைக்குமிடையில்
அகப் பட்டு விட்ட
பாவம் செய்த ஜீவன் நான்!

பெரும் கோபம் வருகிறது
எனை பந்தாடிப் பார்க்கிற
அந்த ஆண்டவனிடம்!

நேசம் என்ற முகமூடி அணிந்து
நெருப்பு வார்த்தை கக்கும்
எத்தனை கயவர்களை
கண்டவள் நான்?

ஒரு நாளும்
அன்பு கிடையாது என்றும்
கவலைகள் உடையாது என்றும்
தலை கீழாய் எழுதப் பட்டிருக்குமோ
என் தலையெழுத்து?

என் மனசாட்சி
உயிர் விட்டதன் காரணம்....
என் மேல் நானே கொள்கிற
கழிவிரக்கம் தாளாமல் தான்!!!!

கருவிழி நாகம் !சில நேரம்
நான் புன்னகைக்கிறேன்
சில நேரம் சிரிக்கிறேன்...
ஆனால் என் ஆன்மாவோ
எனக்குள்ளேயே உருகி அழுகிறது!

ஆண்டவனிடம்
வினாக்களை அடுக்குகிறேன்
வீணாய் கழிந்த
என் கணங்களை எண்ணி
ஆன்மா
நரகம் நோக்கி விழுகிறது!
நான்
பறந்திட முயல்கையில் எல்லாம்
என் சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன!
மிகக் கொடுமையானது
இவ்வுலகம்...
மனித இனமும்
பொல்லாதது!

விறகை
என் நெஞ்சில் அடுக்கி
மண்ணெண்ணை ஊற்றப்படுகிறது!
கதிர் வீச்சுப் பேச்சுக்களில்
கசிந்துருகி
உள்ளமோ கதறி அழுகிறது!

என் ஆன்மா
ஓலமிட்டு அழுவதை
யாராலும் செவியேற்க முடியாது...
ரத்தக் கறை படிந்திருக்கும்
என் தனிப் பாதையில்
யாராலும் நடந்து வரமுடியாது!
அழகாய தெரிந்தவர்கள்
அகோரமாய் சிரிக்கிறார்கள்;
ஆறுதலாய் தலை தடவியவர்கள்
ஆறுதலாய் தலை தடவியவர்கள்
ஆளை கொல்ல முனைகிறார்கள்!

கருவிழியால்
காதல் தூவிய கண்களில்
கறுத்த நாகமும் புடையான்களும்!
பிசாசுகளின் குகை வீட்டில்
என்னை
அறைந்து வைத்திருக்கும்
சிலுவை
உடைத்தெறியப் படும்
நாள் எங்கே?

சாத்தான்கள் கட்டிய
உரிமை மீறல் எனும் நூல்
எப்போது அறுபடும்?
மனிதம் தின்னும்
காட்டேறிகளுக்கிடையில்
அகப்பட்ட முயல்குட்டி நான்!!!!

புன்னகை கத்தி !பேனாவை
பற்றும் போதெல்லாம்
அது
உனை பற்றி எழுத மட்டுமே
அடம் பிடிதத்தழுது
தலை குனியும்!

எனை வதைத்து
அன்பால் கொன்ற நீயா
இன்று
ஏமாற்றி விட்டு தூரச் சென்றது?

பேரதிர்ச்சியடைகிறேன்
உன் மாற்றங்களால்!
நானில்லாத வாழ்வு
நலமில்லை என்றவளே..
இப்போதென்ன
பிணமாகவா வாழ்கிறாய்?

உனை காதலித்ததற்கு பதிலாக
சுகமாய் கொஞ்சம்
விஷம் குடித்திருக்கலாம்!
பூக்களாய் நீ
புன்னகையை
பரிமாறிய போதெல்லாம்...
ஆனந்தப் பட்டு
சிரித்தேனே நானும்?

அந்த பூங்கொத்துக்கடையில்
வஞ்சகமெனும்
கத்தி இருப்பது பற்றி தெரியாமல்????

ஓரு வீணை அழுகிறது !பவ்வியமாய் நடந்து வந்து
பால்நிலா நீ
ஆசிர்வாதம் கேட்டாய்
சுயநலம் என அறிந்திருக்கவில்லை..
சுமங்கலியாய் வாழ் என்றேன்!

இன்று
வேதங்கள் நிஜமிழந்து
மந்திரங்களும்
பொய்யாகிப்போனது!
கண்மணியே!
என் மூச்சடங்கும் நேரம்
நெருங்கிக் கொண்டிருப்பதை
அறிய மாட்டாய் நீ!

ஒரு நிலவினை போல
மெது மெதுவாய் தேய்கிறேன்...
மீண்டும் உதிக்கவே
முடியாத படிக்கு!

காதலில் வாழ்ந்தவளே!
என் அஸ்தமனத்துக்குப் பின்
எப்படி சீர்படுத்திக் கொள்வாயோ
உன் வாழ்வை?

படுக்கையில் நான் விழுந்தால்
பாவி என்னை மன்னித்து விடு..
புதுமைப் பெண் நீ என்று
பூமிக்கே காட்டி விடு!

ஒரு வேளை....
நான் மீளா துயிலில்
ஆழ்ந்து விட்டால்;;;.....
காவலனை தேடிக் கொள்
கட்டாயம்!

நரம்பில்;லா வீணை நான்..
நடுவீதியில் எறியப் படுவதில்
தப்பேதுமில்லையே?
வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

பலி சொல்லும் உலகுக்கு
பயந்து நீ சாகாதே..
செவியிரண்டை மூடிக் கொள்
ஊர் பேச்செண்ணி வேகாதே!

என் துணைவிக்கு ஒன்றென்றால்
என் ஆவி சாந்தம் அடையாது...
ரோஜாவாய் பவனி வர
உனக்கிருக்கும் தடை ஏது????

காற்றில் வந்த கல்யாண கீதம் !தண்ணீரை நீ கேட்டால்
வடிகட்டி தந்திருப்பேன்...
கண்ணீரை கேட்ட போது
எப்படி நான் துடித்துப் போனேன்?

உன் அன்பைத் தேடினேன்...
நீ எங்கேயோ ஓடினாய்.....
உனை நான் நாடினேன்
கல்யாண கீதம் பாடினாய்!

இதயத்தின் ரணங்களுக்கு
நம்பியிருந்தேன்
உனை மருந்தாய்...
கொஞ்சமாவது புரியாமல்
எனை எப்படி மறந்தாய்?

அன்பென்று நடித்தவர்கள்
பாதியிலே மாறினார்கள்...
வாள்முனை வார்த்தைகளால்
இதயத்தை கீறினார்கள்!

தாலி நீ ஏற்று விட்டாய்
தாயாகவும் மாறி விட்டாய்...
தாடியுடன் அலையும் நான் - இனி
தாரம் தேடப் போவதில்லை!!!தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா