Thursday, February 26, 2009

கருவிழி நாகம் !



சில நேரம்
நான் புன்னகைக்கிறேன்
சில நேரம் சிரிக்கிறேன்...
ஆனால் என் ஆன்மாவோ
எனக்குள்ளேயே உருகி அழுகிறது!

ஆண்டவனிடம்
வினாக்களை அடுக்குகிறேன்
வீணாய் கழிந்த
என் கணங்களை எண்ணி
ஆன்மா
நரகம் நோக்கி விழுகிறது!
நான்
பறந்திட முயல்கையில் எல்லாம்
என் சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன!
மிகக் கொடுமையானது
இவ்வுலகம்...
மனித இனமும்
பொல்லாதது!

விறகை
என் நெஞ்சில் அடுக்கி
மண்ணெண்ணை ஊற்றப்படுகிறது!
கதிர் வீச்சுப் பேச்சுக்களில்
கசிந்துருகி
உள்ளமோ கதறி அழுகிறது!

என் ஆன்மா
ஓலமிட்டு அழுவதை
யாராலும் செவியேற்க முடியாது...
ரத்தக் கறை படிந்திருக்கும்
என் தனிப் பாதையில்
யாராலும் நடந்து வரமுடியாது!
அழகாய தெரிந்தவர்கள்
அகோரமாய் சிரிக்கிறார்கள்;
ஆறுதலாய் தலை தடவியவர்கள்
ஆறுதலாய் தலை தடவியவர்கள்
ஆளை கொல்ல முனைகிறார்கள்!

கருவிழியால்
காதல் தூவிய கண்களில்
கறுத்த நாகமும் புடையான்களும்!
பிசாசுகளின் குகை வீட்டில்
என்னை
அறைந்து வைத்திருக்கும்
சிலுவை
உடைத்தெறியப் படும்
நாள் எங்கே?

சாத்தான்கள் கட்டிய
உரிமை மீறல் எனும் நூல்
எப்போது அறுபடும்?
மனிதம் தின்னும்
காட்டேறிகளுக்கிடையில்
அகப்பட்ட முயல்குட்டி நான்!!!!

No comments: